2025 மே 19, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்புக்கு போராட்டத்திற்கு எதிரான நீதிமன்ற தடைக்கு திருத்தம் கோரி வழக்கு

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவு கட்டளையில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த ஆர்பாட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக நான்கு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றக் கட்டளையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் சட்டத்தரணி குருபரன் நீதிமன்றில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவரான யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சட்டத்தரணிகளான பா.பார்தீபன், ஏ.மணிவண்ணன், ஜெயரூபன், குருபரன் ஆகியோர் ஆஜராகி நீதிமன்றக் கட்டளையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்

இதேவேளை யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தனது நியாயப்பாடுகள் தொடர்பாக மன்றில் சமர்பணம் செய்திருந்தார். இவரின் சமர்பணத்தில் தெரிவிக்கப்பட்டவையானது,

நீதிமன்றக் கட்டளையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கிழித்து மேல் நோக்கி எதிந்துள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற நடவடிக்கை இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமது சமர்பணத்தில் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரது சமர்பணத்தை அடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி இந்த வழக்கிற்காக கட்டளை வழங்கப்படும் என உத்தரவிட்டார் யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X