2025 மே 19, திங்கட்கிழமை

'யாழ்.குடாநாட்டில் கழிவு எண்ணைக் கலாசாரத்தை இல்லாமல் செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் '

Super User   / 2012 ஜூன் 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ்.குடாநாட்டில் கழிவு எண்ணைக் கலாசாரத்தை இல்லாமல் செய்வதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். சிறிகுகநேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை மணியளவில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் காரணமாக பொலிஸார் பொதுமக்களின் உதவிகளை எதிர்பார்கின்றனர். குற்றச் செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தரவேண்டும் எனத் தெரிவித்த அவர், கடந்த வாரம் யாழ். குடாநாட்டில் நடைபெற்ற பாரிய மற்றும் சிறு குற்றச் செயல்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சந்தேக நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2010 ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5,49,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நகர்கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்தில் பித்தளை தகடுகள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பாக சீமெந்து தொழிற்சாலைக் காவலாளியினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

அத்தோடு வடபிராந்தியத்தில் சென்ற வாரம் இடம் பெற்ற குற்றச்செயல்களில் முக்கியமான என தாம் கருதும் குற்றச் செயல்களைப் பட்டியல் படுத்தினார்

மன்னார் பகுதியில் 773 கிராம் கிரோயின் போதைப் பொருளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வீதி விபத்தில் உயிரிழந்தமை பொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தைப் பகுதியில் பாவிக்கப்பட்ட குண்டுகளை லொறியில் கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது என அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, சுன்னாகம், இளவாலை, காரைநகர், ஊர்காவத்துறை, காங்கேசன்துறை ஆகிய பிரதேச உதவிப் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X