2025 மே 19, திங்கட்கிழமை

அச்சுவேலி தொழிற்பேட்டையில் முதலீடு செய்பவர்களுக்கான கடன் வழங்கல் குறித்து கலந்துரையாடல்

Super User   / 2012 ஜூன் 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



                                                                           (எஸ்.கே.பிரசாத்)


இந்திய அரசின் நிதியுதவியுடன் அச்சுவேலிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொழிற்பேட்டையில் தங்களின் முதலீடுகளை செய்யவுள்ளவர்களுக்கான கடன் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை யாழ் மாவட்டச் செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் யாழ் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும் தெளிவுபடுத்தினர்.

மத்திய வங்கியின் கடன் நடைமுறைகள் கொள்கைகளை அனைத்து வங்கிகளும் பின்பற்றி கடன் வழங்கப்பட்டு வருவதனால் மத்திய வங்கியின் கடன் வழங்கல் திட்டக்கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுனருடன் கதைத்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தொழிற்பேட்டை முதலீட்டாளர்களுக்கு 5 தொடக்கம் 50 மில்லியன் வரையான நிதியினை நன்கொடையாக வழங்க வெகா பிக் பிளஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

உட்கட்டமைப்பு வேலைகள் இந்திய  அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.  எட்டு மாதத்திற்கு இந்த உட்கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய தூதரக அதிகாரி சிறிக்காந் மற்றும் வங்கி முகாமையாளர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X