2025 மே 19, திங்கட்கிழமை

மட்பாண்ட உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

A.P.Mathan   / 2012 ஜூன் 23 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுவருகின்ற தொழிலாளர்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று சனிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மட்பாண்ட உற்பத்தி தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மட்பாண்ட உற்பத்தி தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக உரிய கவனமெடுப்பதாகவும் இவர்களின் தொழில் விருத்தித்திக்கு பிரதேச அபிவிருத்தி வங்கியூடாக கடன் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன் மட்பாண்ட உற்பத்தி பொருட்களை அருங்கலைகள் பேரவை ஊடாக தென்னிலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். இந்தச்சந்திப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் இவ்வமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X