2025 மே 19, திங்கட்கிழமை

மக்கள் போராட்டம் தடுப்பு; யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக த.தே.கூ. வழக்கு

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

தங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக நீதிமன்றத்திற்கு பொய் கூறி காணி சுவீகரிப்பு போராட்டத்தை தடுப்பதற்காக திட்டமிட்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்ற யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைபு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோதிராஜா தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை குழப்புவதற்காக யாழ்.பஸ் நிலையத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரை குவித்தமை, ஜனநாயக மக்கள் சார்ந்த போராட்டங்களைத் தேவையில்லாமல் தடுப்பதற்கு முயற்சிக்கின்றமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியே மேற்படி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மாவை எம்.பி குறிப்பிட்டார்.

முறிகண்டியில் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள காணி சுவீகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எது நடந்தாலும் எங்கள் மக்கள் சார்ந்த போராட்டம் நடைபெறும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முயடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X