2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய விசேட மாநாடு

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். குடாநாட்டில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட மாநாடு ஒன்று இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போது யாழ். குடாநாட்டில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில்  மீளக்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள விடயங்கள் மற்றும் மீள்குடியேற்றத்தின் போது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பன தொடர்பில் ஆராயப்பட்டன.

அத்தோடு மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டுத்திட்ட வசதிகள், சுகாதாரம், மின்சாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன் மீளக்குடியேறும் மக்களின் தற்போதைய நிலை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மீள்குடியேற்றம் தொடர்பான மாநாட்டில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், அலன்ரின், யாழ்.மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநாகர முதலவர், யாழ்.பிரதேச செயலளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர், பிரதேச சபையினர், அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X