2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மதுபோதையில் போக்குவரத்து பயணிகளுக்கு இடையூறாக செயற்பட்ட நான்கு பேரை இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது நான்கு பேருக்கும் தலா 5000 ரூபா அபராதமும் செலுத்தத் தவறின் ஒருமாத சிறைத்தண்டனையும், கட்டாய ஒரு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த நான்கு பேரும் மதுபோதையில் போக்குவரத்து பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் எனவும் இவர்களினால் யாழ்.நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக யாழ்.பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X