2025 மே 19, திங்கட்கிழமை

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் மரணம்

Super User   / 2012 ஜூன் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். அராலி செட்டியார் மடம் வட்ட கோட்டை பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் சிகிச்சை பயனின்றி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்

அராலி வட்டு மத்திய கல்லூரியை சேர்ந்த 16 வயதான சுரேஸ்குமார் நிலக்ஷன்  என்பவர் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கையில் வயல் கட்டில் விழுந்து படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் யாழ். போதனா வைத்pயசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X