2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு முறைப்பாடு பெட்டிகள் வைக்க தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முறைப்பாட்டு பெட்டிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநரசபை ஆணையாளர் பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்ப்பில் முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது மாநகர சபையினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைவாக மக்கள் குறைகேள் செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50ற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து வருகின்றனர்.

மக்களினால் முன்வைக்கப்படுகின்ற பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் மாநகரசபை தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் மக்கள் தங்கள் முறைப்பாடுகளைச் செய்யலாம். அவ்வாறு முறைப்பாடுகளைச் செய்கின்றபோது அவர்களுக்கு குறியீட்டு இலக்கம் வழங்கப்பட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் கடிதம் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X