2025 மே 19, திங்கட்கிழமை

இந்து கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Super User   / 2012 ஜூன் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். குடாநாட்டிலுள்ள இந்து கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் இன்று திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக யாழ். பொலிஸ் நிலையத்தினால் கோவில்களின் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் எஸ்.விக்கிரமாராட்சி தெரிவித்தார்

யாழில் கடந்த காலங்களில் இந்து கோவில்களின் சாமி சிலைகள் முதல் கொண்டு சாமியின் வாகனங்கள் திருடப்பட்டு விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வந்தன.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக சில இந்து கோவில்களில் திருடப்பட்ட பித்தளை மன்றும் ஜம்பொன்னாலான பிள்ளையார், நடரேஸ்வரர் சிலைகள் உரிய கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீவாலை வடக்கு வேம்பிராய் கலட்டி விநாயகர் கோவில் குருக்களிடம் திருடப்பட்டு இருந்த சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இதேவேளை, முல்லைத்தீவு கற்பகப் பிள்ளையார் கோவிலிருந்து 50 இலட்சம் பெறுமதியான சாமி சிலைகள் மற்றும் வாகனங்கள் திருடப்பட்டமை தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் தங்களுடைய சாமி வாகனங்கள் திருடப்பட்டமை தொடர்பாக முறையிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X