2025 மே 19, திங்கட்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நபர் குற்றமற்றவர் என தீர்ப்பு

A.P.Mathan   / 2012 ஜூன் 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜினி, ஜே.டானியல்)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை குற்றமற்றவர் என யாழ். மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி ஓமந்தையில் வைத்து கைதுசெய்யப்பட்ட புதுக்குடியிருப்பு, கோம்பாவிலைச் சேர்ந்த முருகையா செந்தில்வேல் என்பவருக்கே குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட குறித்த நபருக்கெதிராக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய அந்நபரின் வாக்குமூலங்கள் கடந்த மே 31ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறித்த நபர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கினார். இருந்தபோதிலும் குறித்த நபர்மீது வவுனியா நீதிமன்றத்திலும் வழக்கு பதிவாகியிருப்பதால் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஜே.விஸ்வநாதன் பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X