2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளராக மாகாண கல்வி பணிப்பாளர் விக்கினேஸவரன் நியமனம்

Super User   / 2012 ஜூன் 26 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வட மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளராக வட மாகாண கல்வி பணிப்பாளர் விக்கினேஸவரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த இவர்,  நாளை புதன்கிழமை  வட மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அத்துடன் புதிய மாகாண கல்வி பணிப்பாளராக மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த உதயகுமார் பதில் கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இன்று செய்வாயக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X