2025 மே 19, திங்கட்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 27 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூளாய் சுழிபுரத்தைச்  சேந்த பொன்னையா சிதம்பரநாதன் என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஓமந்தையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று இலங்கை அரசுக்கு எதிராக போர் தொடுத்தமை, புலனாய்வுத் தகவல் சேகரித்தமை தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த நபர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சட்டவாக்க தேவைகளுக்கேற்ப பெறப்படவில்லை எனவும் இவருக்கு எதிரான வேறு சான்றுகள் இருந்தால் நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்குமாறு கூறி இவரின்; குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் நிராகரித்தார்

இந்த வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X