2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். உதயபுரம் பகுதியில் கரையொதுங்கிய படகை ஆதாரங்களை காட்டி பெற்றுக்கொள்ளுமாறு பணிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                               (ஜெ.டானியல்)
யாழ்.குடாக்கடல் பகுதியான மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை கரையொதுங்கிய கண்ணாடி இழைநார் படகினை உரியவர்கள் தகுந்த ஆதராங்களை காட்டி பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கடல் காற்றுக் காரணமாக கிளிநொச்சிப் பகுதி மீனவருடைய படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இன்றைய தினம் யாழ்.பிராந்திய நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடல் உபகரணங்களும் மற்றும் இயந்திரங்களும் இந்தப் படகில் காணப்படுவதாகவும் உரியவர் தங்கள் கடற்றொழில் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து கரையொதுங்கிய கண்ணாடி இழைநார் படகினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X