2025 மே 19, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய தீர்ப்பை மீளாய்வு செய்ய மேல்முறையீடு: கஜேந்தி

A.P.Mathan   / 2012 ஜூன் 28 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளை சரியானது என யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா நேற்று புதன்கிழமை வழங்கிய தீர்ப்பு தொடர்பாக மீளாய்வு செய்தற்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

யாழ். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக முக்கியமான சட்டத்தணிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. ஒருசில நாட்களில் உயர் நீதிமன்றதில் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு வழங்குத்தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X