2025 மே 19, திங்கட்கிழமை

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ்

Menaka Mookandi   / 2012 ஜூலை 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் புதிய அதிபர் பதவியேற்றமை தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை சுமூகமாக தீர்வு காண்பதற்காக இன்று திங்கட்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது அக்கல்லூரியில் பிரதி அதிபர் திருமதி செல்வ குணாலனைச் சந்தித்து பாடசாலையில் மாணவர்களை பிரச்சினை இல்லாது பார்த்துக் கொள்ளுமாறும் தற்போதையில் பழைய அதிபர் திருமதி முத்துக்குமரன் அதிபர் பதவியில் தற்காலிகமாக இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அதிபர் பதவியேற்பு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொடர்ந்தும் பாடசாலையில் அமைதி நிலமையைக் கொண்டுவாருங்கள்.

கல்லூரியைக் குழப்பமடைய விடவேண்டாம். இன்னும் இரு வாரங்களில் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இதன்போது மேலும் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X