2025 மே 19, திங்கட்கிழமை

பழைய மாணவிகள் சங்கத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்தமையினால் என்னை மாற்றுவதற்கு முயற்சி: வேம்படி ம

Super User   / 2012 ஜூலை 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத்)


யாழ். வேம்படி கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் அதிகார துஷஷ்ஸ்பிரயோகத்தை தடுத்தமையினால் தன்னை பாடசாலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பழைய மாணவிகள் சங்கம் திட்டமிட்டு செயற்படுவதாக யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் ராஜினி முத்துக்குமார் தெரிவித்தார்

யாழ். மாநாகர சபை மாநாட்டு மண்டபத்தில் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தலமையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யாழ். வேம்படியில் தற்போது நடைபெறுகின்ற அதிபர் பதவி நிலை இழுபறிக்கு முக்கிய காரணம் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தினர். இரண்டு அரை வருடங்களாக இந்த கல்லூரியில் அதிபராக இருக்கின்றேன்.

இந்த மகளிர் கல்லூரியில் 70 சத வீதமான மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்கள். ஏனையவர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிள்ளைகள். ஏழை மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரிக்கான நன்கொடை வாங்குவது இல்லை என நான் முடிவு செய்தேன்

இந்த முடிவானது பழைய மாணவிகள் சங்கத்தினருக்கு பிடிக்கவில்லை இத்தோடு முன்னைய காலங்களில் வாங்கப்பட்ட நன்கொடை தொடர்பில் எந்தவித கணக்கு அறிக்கையும் இது வரை காட்டப்படவிவ்லை,

இத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் தலைவியாக பாடசாலை அதிபர் தான் இருக்க வேண்டும் ஆனால் இந்த சங்கத்தில் அப்படி இல்லை. அதிபர் இருக்க கூடாது எனவும் கணக்கு வழக்கு தம்மிடம் கேட்கக் கூடாது என அவர்கள் நினைக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 15 இலட்சத்திற்கு இருவரை கணக்கு இல்லை. இதைத் தட்டிக் கேட்டதால் தான் என்னை மாற்றி விட்டு தங்கள் விரும்புகிறவரைப் போடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்

இந்தப் பாடசாலை தேசிய பாடசாலை இதற்கு தகுதியானவர் தான் இதில் அதிபராக இருக்க முடியும் என்று சுற்று நிருபம் கூறுகிறது. ஆனால் புதிதான இந்தப் பாடசாலைக்கு வரப்போகின்றவருக்கு தகுதி இல்லை. ஆனால் சேவைக்காலம் கூடியதாக இருக்கிறது

இது ஒரு மனித உரிமைப் பிரச்சனை. இந்த விடையத்தின் கல்வி அமைச்சு சரியான முடிவு எடுக்கும் என நம்புகின்றேன்' என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X