2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை மலசலகூடக் குழாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 04 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை  துப்பரவு செய்துகொண்டிருந்தபோது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

குறைமாதத்தையுடைய இச்சிசுவின் சடலம் இரண்டு வாரங்களுக்கு முன்னர்; பிரசவிக்கப்பட்டு இம்மலசலகூடக் குழாயினுள் போடப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X