2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மருத்துவர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 04 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தங்களுக்கு திருப்தியில்லையெனக் கோரி எதிர்வரும் 6ஆம் திகதி தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவர் சங்கம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக வந்த விசாரணைக் குழுவின் அறிக்கைகள் இன்னமும் வெளிவரவில்லை. அத்துடன், வைத்தியரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை

சுதந்திரமான வெளிப்பாட்டுத் தன்மை கொண்ட நிர்வாகம் யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்க வேண்டுமென்பதற்காக ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X