2025 மே 19, திங்கட்கிழமை

சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக கல்விசாரா உழியர்கள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)


சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக கல்விசாரா உழியர்களினால் இன்று பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி கடந்த 6ஆம் திகதியிலிருந்து சாத்வீக வழியில் போராடிவரும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கோரி கடந்த 22ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கல்விசாரா உழியர்களின் கோரிக்கையை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமக்குரிய சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை தங்கள் போராட்டம் விரிவு படுத்தப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X