2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்.எஸ்கே.பிரசாத்)


நாடு தழுவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக கல்வி சார் உழியர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக கல்விசார் உழியர்கள் விசேட வகையினராக கருதப்படவேண்டும், நாட்டின் தேசிய உற்பத்தி மூலம் தற்பொது 1.9 வீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இது 6 வீதமான உயர்தப்படவேண்டும், பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாகவும் அரசியல் தலையீடுகள் இன்றியும் செயற்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியில் இருந்து தொடர்சியாக இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப்புறக்கணிப்பு தொடர்பாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கதின் தலைவர் அ.ராஜகுமார் தெரிவிக்கையில்...

“மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் உயர்கல்வி அமைச்சினால் சம்பள அதிகரிப்பு தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டபோது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ். பல்கலைக்கழகமும் அதற்கு ஆதரவு வழங்கியுள்ளது” என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X