2025 மே 19, திங்கட்கிழமை

நோயாளர் உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதம்

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், ரஜனி
)
யாழ்.போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளருக்கும் யாழ்.வைத்தியர் சங்கத்தினருக்குமிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும் எனக் கோரியும் நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அலுவலகம் முன்னால் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க உப தலைவர் க.கந்தவேல், திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டமானது தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடருமென உண்ணா விரதிகள் தெரிவித்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர்களின் உரிமையைப் பாதுக்க வேண்டும், யாழ்.போதனா வைத்தியசாலையின் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு முடிவுகள் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X