2025 மே 19, திங்கட்கிழமை

இராணுவச் சிப்பாயின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழந்ததாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்,எஸ்.கே.பிரசாத்)

எழுதுமட்டுவாள் பகுதியில் இராணுச் சிப்பாயின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எழுதுமட்டுவாளைச் சேர்ந்த கந்தையா ஜெயராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

குடும்ப அங்கத்தவர்கள் இருவருக்கு இடையிலான மோதலை அடுத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தலையிட்டு மேற்படி நபரைத் தாக்கியதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X