2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட தெரிவு போட்டி

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 2012ஆம் ஆண்டிற்கான வலைப்பந்தாட்ட தெரிவுப் போட்டி  எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். வேம்படி மகளிர் கல்லூரி  மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் 14 மற்றும் 21 வயதுக்கு கீழ்பட்டவர்கள் பங்குபற்றிக் கொள்ளலாம். 21 வயதுக்கு கீழ்பட்டவர்கள் பங்குபற்றுவதானால் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ஏ.எவ்.ஜே. ரூபசிங்கத்துடன் தொடர்பு கொண்டு தமது வரவு பதிவை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டடுள்ளது.

இப்போட்டியில் முதல் இரு இடங்களை பெறுவோர் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நாவலப்பிட்டியில் நடைபெறவிருக்கும் அகில இலங்கை வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்ற யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் ஒழுங்குகள் செய்யவுள்ளது.

இதில் திறமையான வீராங்கனை தெரிவும் இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ஏ.எவ் ஜே.ரூபசிங்கம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X