2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வாக்காளர் பெயர்ப் பட்டியல் மீளாய்வில் எதிர்பாராத தடங்கல்கள்

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். மாவட்ட வாக்காளர் பெயர் பட்டியல் பி.சி படிவங்கள் மீளாய்வு செய்து யாழ் மாவட்ட தேர்;தல் திணைக்களத்தில் மீளளிப்பு செய்யும் நடவடிக்கைகளை சில கிராம உத்தியோகத்தர்கள் செய்யத் தவறியமையால் எதிர்பாராத தடங்கல்களை  சந்தித்துள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ. குகநாதன் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் பி.சி படிவங்கள் எவ்வொரு கிராம உத்தியோகத்தர்களுக்கும் கையளிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட போதிலும், அப்படிவங்களை பூரணபடுத்தி பெற்று தேர்தல் திணைக்களத்திற்கு கையளிக்க சில கிராம உத்தியோகத்தர்கள் தவறியுள்ளனர்.

பி.சி படிவ கால அட்டவணை வழங்கப்பட்ட போதிலும் உரிய அனுமதி பெறாமையாலும், அழைத்த தினத்திற்கு வராமையினாலும் மீளாய்வு வேலை செய்வதில் எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

அதேவேளை பி.சி படிவங்களை கையளிக்கும் கால நீடிப்பு இம்மாதம் 15 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டுள்ளமையினால்  தவறவிட்டவர்கள் உரிய கிராம உத்தியோகத்தரை சந்தித்து கையளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஜு10ன் மாதம் சி.சி படிவங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்ய தவறுபவர்கள்; வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்படுவார்கள். எனவே, தவறவிட்டவர்கள், தவறவிட்டதற்கான காரணத்தினை தெரிவித்து தேசிய அடையாள அட்டையுடன் கிராம உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X