2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவன வெள்ளிவிழா மலர் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 25ஆவது வெள்ளிவிழாவை முன்னிட்டு வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியிட்டுவைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் வழங்கிவைக்க யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இச்சிறப்பு மலரை வெளியிட்டு வைத்தார்.

இதனையொட்டி யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, மாற்றுவலுவுடையோருக்கான சைக்கிளோட்டப் போட்டி, மெதுவான சைக்கிளோட்டப் போட்டி,  கயிறு இழுத்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் திருமதி கணேசமூர்த்தி, யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் செயலாளர் திருமதி டாக்டர் தெய்வேந்திரம் ஆகியோரின் சேவையைப் பாராட்டி  ஐ.சி.ஆர்.சி நிறுவனப் பணிப்பாளர் கிறிஸ்தோப்பர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்த அதேவேளை, யாழ். ஜெய்ப்பூர் நிறுவன பயனாளியொருவர் தலைவர் டாக்டர் திருமதி கணேசமூர்த்தி, செயலாளர் திருமதி. டாக்டர் தெய்வேந்திரம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், திட்டப்பணிப்பாளர் திருமதி. மோகனதாஸ், மாற்றுவலுவுடையோர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X