2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இரவுரோந்து நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இரவுரோந்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்.பொரிஸார் தெரிவித்தனர்.

யாழில் இரவு நேரங்களில் கடைகள் உடைப்பு மற்றும் வீடுகளில் புகுந்து திருட்டு போன்ற வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒரு வாரத்தில் 20 முதல் 30 வரையான திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும் இரவுரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைக் குறைக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X