2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாண மாணவர்களுக்கு இந்திய கலைஞர்களின் பயிற்சி

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகர் உன்னிகிருஷ்ணன், ரி.எம்.கிருஷ்ணா மற்றும் பரதநாட்டிய கலைஞர் திருமதி அலமேலு வல்லி ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இசை, நடன பயிற்சி பட்டறை ஒன்றினை கல்வி வட மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடத்தவுள்ளனர்.

எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணி வரை இடம்பெறவுள்ள இப்பயிற்சி பட்டறையில் 2013ஆம் ஆண்டு கா.பொ.தர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் இசை, நடனத்தினை ஒரு பாடமாக பயிலும் மாணவர்களை கலந்து கொண்டு பயன்பெறுமாறும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் கேட்டுள்ளார்.

யாழ் நல்லூர் முருகள் ஆலய மகோற்சவத்திற்கு கர்நாடக இசை நிகழ்வுக்கான வருகை தரவுள்ள இக்கலைஞர்களே இப்பயிற்சி வருப்பினை நடத்தவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X