2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கைக்கு உதவியளிக்கும் ஜப்பானை மதிக்கிறோம்: அமைச்சர் மஹிந்தயாப்பா அபேவர்தன

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


பெரிய நாடுகள் இருந்தபோதிலும், ஜப்பான் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருவதனால் ஜப்பானை நாங்கள் மதிக்கின்றோமென விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் ஜப்பானினால் வழங்கப்பட்ட சிறிய உழவு இயந்திரங்களை வடமாகாண விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு யாழ். திருநெல்வேலி விவசாயத் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஜப்பானினால் வழங்கப்பட்ட உதவிகளில் 45 வீதமான உதவிகள் வடபகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்தகால 30 வருட அசாதாரண நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கூடுதலான ஜப்பான் உதவிகள் வடபகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக ஜப்பானும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு தமது செயற்பாடுகளை, உணர்வுகளை பல்வேறு வழிகளிலும் காட்டிவருகின்றனர். அவ்வழிகளில் உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்வும் ஒருபடியாகும்.

வடமாகாணத்திலுள்ள விவசாயிகளுக்கு இருசக்கர சிறிய உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்வு புத்தூர் கமநலசேவைகள் நிலையத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு 70 உழவு இயந்திரங்களும்  முல்லைத்தீவுக்கும் வவுனியாவுக்கும்  75 உழவு இயந்திரங்களும்   கிளிநொச்சிக்கு 65 உழவு இயந்திரங்களும்   மன்னாருக்கு 80 உழவு இயந்திரங்களும்  ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை நாட்டின் சிறந்த விவசாயியாக மன்னார் மாவட்ட விவசாயியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்' என்றார். 

இந்நிகழ்வில் ஜப்பானின் தூதுவர் நொபியூகிற்றோகோபோ, அவரது பாரியார், ஜெய்க்கா நிறுவனத்தின் அதிகாரி டக்கியோ ஒற்சுவா, விவசாய அமைச்சின் மேலதிக செயலாளார் அமிற்றியகொட, விவசாய அமைச்சின் ஆணையாளர் திருமதி சுமத்திர கன்னங்கரா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரீன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X