2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியர்களின் ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டமைக்கு விளக்கமளிக்குமாறு சிகேராவுக்கு நீதிமன்றம் உத்தர

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்.வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றியமைக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவை மன்றில் விளக்கமளிக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியாசாலையில் வைத்தியர் தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் வைத்தியர்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் படி இடைநிறுத்தப்பட்டது.

இந்த இடைக்கால தடை உத்தரவை மாற்றியமைக்குமாறு கோரி யாழ். போதனா வைத்திய சங்கத்தினர் தாக்கல் செய் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மன்றில் ஆஜராகி இந்த போராட்டத்தை தடுத்தமைக்கான உத்தரவைப் பெற்றமைக்கான விளக்கத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மன்றில் ஆஜராகி தெரியப்படுத்துமாறு யாழ். பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுக்கு யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X