2025 மே 19, திங்கட்கிழமை

ஆரியகுளம் பகுதியில் பெண்ணின் கையைப்பிடித்து இழுத்த இளைஞன் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 11 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். ஆரியகுளம் பகுதியில் இளம் பெண் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் வீதியில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததை வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர்.

குறித்த இளைஞன் இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போது அப்பெண் அலறியபோது வீதியில் சென்றவர்கள் அவ்விளைஞனை சமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது அப்பகுதிக்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த இளம் பெண்ணை விசாரணை முடிவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த இளைஞன் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குணசிங்க தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X