2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞனை ஏமாற்றிய வயோதிபப் பெண்ணுக்கு பிணை

A.P.Mathan   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

18 வயது பெண் போல் கதைத்து இளைஞர் ஒருவரிடம் 11 லட்சம் ரூபா பணம் மோசடி செய்த வயோதிப பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழ். மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த வயோதிப பெண்மணி;யொருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் 25 வயதுடைய இளைஞர் ஒருவருடன் உரையாடி, குறித்த இளைஞனிடம் 11 லட்சம் ரூபா பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தினை வாங்கி விட்டு இளைஞரை கண்டி, நீர்கொழும்பு, கொழும்பு போன்ற இடங்களுக்கு சந்திக்க வருவதாக கூறி அலைய வைத்துள்ளார். பின்பு குறித்த பெண் வயது முதிர்ந்தவர் என்பது தெரிய வந்ததும் கொடுத்த பணத்தினை பெற்றுத் தருமாறு இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் படி குறித்த வயோதிப பெண்மணி கடந்த புதன்கிழமை யாழ். பொலிஸாரினால்
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேற்படி வழக்கினை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மு.ரெமிடீயஸ் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். நகர்தல் பத்திரத்தினை யாழ். நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டவேளை சந்தேக நபர் இன்று 1 லட்சம் ரூபா பணத்தினை செலுத்துவதாகவும், 30ஆம் திகதி 1 லட்சம் ரூபா செலுத்துவதாகவும், மிகுதி தொகையினை தவணை முறையில் செலுத்துவதாகவும் திறந்த மன்றில் தெரிவித்தமைக்கு அமைவாக 1 லட்சம் பெறுமதியான நான்கு சரீரப் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா அனுமதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X