2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். கிராம சேவையாளர்களுக்கான மூன்றுநாள் பயிற்சிப்பட்டறை

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

நீதியை சமமாக அணுகும் செயற்திட்டத்தின் கீழ் அரசாங்க சேவைப் பயிற்சி நிறுவனமும், யு.என்.டி.பியின் மாற்றுத்தீர்வு காணுவதற்கான நிறுவனமும் இணைந்து நடத்திய யாழ். மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர்களுக்கான பயிற்சிப் நிறைவும் சான்றிதழ்கள் வழங்கலும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் கிராம சேவையாளர்களுக்கு சட்டம், நிர்வாகம், மற்றும் பொது மக்களுடனான உறவைப்பேணுதல் போன்றன தொடர்பாக  பயிற்சிகள் வழங்கப்பட்டுளன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர்களில் மூன்றாவது அணியினருக்கு இப்பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச சேவை பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சித் அசோக்கா மற்றும் பிணக்குகளுக்கு மாற்றுத் தீர்வுகாணும் நிறுவனப் பணிப்பாளர் ஆன் பனான்டோ ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரைகளை நடத்தியிருந்தனர்.

இன்றைய இறுதிநாள் கருத்தரங்கில் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X