2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ். போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்அங்குரார்ப்பண நிகழ்வில்  சுகாதரா அமைச்சினால் சிபாரிசு செய்யப்ட்ட 16 உறுப்பினர்கள்  தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான உறுப்பினர் சிபாரிசுக்; கடிதங்களும் வழங்கப்பட்டன.

இக்குழுவின் தலைவராக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, உபதலைவராக சட்டத்தரணி ரங்கன், தற்காலிக செயலாளராக இரா செல்வவடிவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகம் சார்ந்த விடயம், நோயாளர்கள் சார்ந்த விடயம், சுகாதாரம் சார்ந்த விடயம், உட்கட்டமைப்பு விடயங்கள் என்பன பற்றி இக்குழு ஆராய்ந்து பிரச்சினைகளை இனங்கண்;டு அவற்றுக்கு உடனடித் தீர்வைக்காணும் நோக்கில் 4 குழுக்களாக செயற்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X