2025 மே 19, திங்கட்கிழமை

இசுறு திட்டத்தின் முதலாவது பாடசாலை கட்டிடம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,
கிரிசன்)

கல்வி அமைச்சின் இசுறு திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைன்களில் முதலாவது பாடசாலைக் கட்டிடம் இறு ஞாயிற்றிக்கிழமை யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடத்தினை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் உள்ள நூலகம் மற்றும் விஞ்ஞானம் ஆய்வு கூடம்இ மனைப்பொருளியல் கூடம்இ விவசாய கூடம் என்பனவும் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டன.  மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் 60 அடி உயரமான கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லும் இன்று நாட்டிவைக்கப்ட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கல்வி அமைச்சர் பந்தல குணவர்தனஇமற்றும் பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயனளாளர் விக்னேஸ்வரன், யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஜ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X