2025 மே 19, திங்கட்கிழமை

போருக்குப் பின்னரான அபிவிருத்தி: யாழ். பல்கலையில் சர்வதேசஆய்வு மாநாடு

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்ச ப்மாநாடு எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் பல்கலைகழக கேட்போர் கூடத்தில்  நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள பிரதம விருந்தினர் மற்றும் அதிதிப் பேச்சாளர் பலர் கலந்துகொண்டு போருக்கு பின்னரான அபிவிருத்தியில் வட பகுதியின் தற்போதைய நிலையினை ஆய்வறிக்கையாக வெளியீடு செய்வதுடன் அதனை ஆவணப்படுத்தவுள்ளனர்.

இந்த மாநாட்டுக்குப் பிரதம விருந்தினராக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவும், அதிதிப் பேச்சாளராக களனிப் பல்கலைக்கழகத்  துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகமவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு விருந்தினராக இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா அழைக்கப்பட்டுள்ளார் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X