2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியசாலை பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் போதனா வைத்தியசாலையின் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கும் யாழ். மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை செய்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக யாழ் மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நிமலன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் வைத்தியர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு எடுத்துக் கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாளைய தினம் வடமாகாணம் தழுவிய ரீதியில் மருத்துவர் சங்கத்தின் தாய்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவிருந்த பணிப்பறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச மருத்துவர் சங்கத்தின் பணிப்பாளாருக்கும் இடையில் இன்று இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ். போதனா வைத்திசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலையை புனரமைப்புச் செய்வது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா மற்றும் புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரன் ஆகியோர் சுகாதார அமைச்சினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X