2025 ஜூன் 21, சனிக்கிழமை

எனது சுய விருப்பத்தின் பேரிலேயே இடமாற்றம்: கரைப்பற்று பிரதேச செயலாளர்

Super User   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இடமாற்றம் பெற்று செல்கிறேன் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய பொ.குகநாதன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய பொ.குகநாதன் தற்போது முல்லைத்தீவு கரைப்பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"கடந்த 5 வருட காலமாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி நான் சுய விருப்பத்தின் பேரிலேயே இடமாற்றம் பெற்று செல்கிறேன்" என்றார்.

இவரின் வெற்றிடத்திற்கு, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய சுமித் சாந்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .