2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். கோட்ட பாடசாலைகளின் கால்பந்தாட்ட அரையிறுதி போட்டி முடிவுகள்

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். கோட்ட பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளிலிருந்து இறுதிப் போட்டி அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இன்று நடைபெற்ற 18 வயதுப் பிரிவினருக்கான அரையிறுதி ஆட்;டத்தில் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி 1:0 என்ற கோல் கணக்கில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியினையும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

16 வயது பிரிவினருக்கான போட்டியில் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலை அணி 4:2 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை பெனால்டி முறையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

இதேவேளை, 14 வயதுப் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 4:0 என்று கோல் கணக்கில் ஒஸ்மானியக் கல்லூரி அணியினையும், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க கல்லூரியினை வென்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

நாளை 16 வயது பிரிவினருக்கான அரையிறுதி போட்டியொன்றும், 14 மற்றும் 18 வயது பிரிவினருக்கான இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .