2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சீன தூதுவர் யாழ். விஜயம்

Super User   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


இலங்கைக்கான சீன தூதுவர் வூ ஜியங்கோ  இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். மேயர்  யோகேஸ்வரி பற்குணராஜாவை மாநகர சபையில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்போது, யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீன தூதுவரிற்கு யாழ். மேயர் விளக்கமளித்தார்.

இதன் பின்னர், யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் நூலகத்தை  பார்வையிட்டதுடன் யாழ் நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒரு மில்லியன் ரூபாவினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதேவேளை, சீன தூதுவர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .