2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

த.தே.கூ. கண்டனம் தெரிவித்தால் யாழ். முக்நகர சபை தீர்மானம் நிறைவேற்றும்: சபை முதல்வர் தீர்மானம் நிறைவ

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கடந்த காலத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தால் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் தாக்கப்பட்டமைக்கு யாழ் மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றும் என்று யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி கோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மாதந்தக் கூட்டத்தில் தலைமையுரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல்வேறு அரசயல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது.  இந்தப் படுகொலைகளின் பட்டியலில் யாழ் மாநகர சபையின் முதல்வர் அல்லிரட துரையப்பா முதல் பல உறுப்பினர்கள் பலியாகியிருக்கின்றார்கள்.

இந்தப் படுகொலைகள் நடைபெற்றபோது அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லூர் பிரதேச சபைத் தலைவர் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு சபையைக் கோருவது அர்த்தமற்றது.

எனவே கடந்த காலச்சம்பவங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனங்களை தெரிவிக்கும் பட்சத்தில் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் தாக்கப்ட்டமையை கண்டித்து மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழ் தேசியக கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் பரஞ்சோதி கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் உட்பட பல ஆயுதக்குழுக்கள்  செயற்றட்டு வந்தன யார் கொல்கின்றார்கள் யார் கடத்துகின்றார்கள் என்று தெரியாது. ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் செய்தார்கள் ஆனால் தற்போது அரசாங்கம் சொல்கின்றது.

புலிகள் அழிந்துவிட்டார்கள் நாட்டில் சமாதானம் வந்துவிட்டது என்று அவ்வாறு இருக்க இப்பது இவ்வாறான சம்பவங்கள் செய்வது யார்? செய்பவர்கள் யார் என்பது தெரியும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் இருப்பதற்கே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிலளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .