2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். அபிவிருத்திகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் ஆராய்வு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள், யாழ்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்டதுடன் தமது வங்கியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் ஆராய்ந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளதுடன், ஊர்காவற்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீதிமன்றத்தினையும் பார்வையிட்டனர்.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளருடன் மின்சார வேலைத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

அதேவேளை, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றம் பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்ஷ்மி ஆகியோரையும் இவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .