2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க தயார்'

Super User   / 2012 நவம்பர் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நடமாடும் சேiயில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக பலர் முக்கியமான அவணங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் அந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தை அறியாமல் சில சலுகைகளைக் கூட இழந்து விடுகின்றார் என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு ஆவணங்கள் இல்லாது இருப்பவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்களை வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .