2025 ஜூன் 18, புதன்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

Super User   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் பொதுமக்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உரிய அதிகாரிகள் ஊடாக பெற்றுக் கொடுப்பது வழமையாகும்.

வுழமை போன்று இன்றும் இந்த செயற்பாட்டில் ஈடுபடும்போதே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமைப்பாளர் அங்கஜனின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.இதன்போது, பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் பிரச்சினைகளை கேட்றிந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .