2025 ஜூன் 18, புதன்கிழமை

காலாவதியான பொருட்களின் விற்பனை நாளாந்தம் அதிகரிப்பு

Super User   / 2013 மே 02 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் உள்ள ஐந்து நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 56 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணத்தில் 10 வர்த்தக நிலையங்களும், ஊர்காவற்துறை 8 வர்த்தகர்களும், மல்லாகம் 18 வர்த்தக நிலையங்களும், சாவகச்சேரி 10 வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் அந்தந்த பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்தடன், வர்த்தக நிலையங்களில் பொருட்களை நுகர்வோர் காலாவதி திகதி, கொள்வனவு திகதி என்பவற்றினை பரிசீலனை செய்து பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .