2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் விரைவில் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸின் யாழ். மாவட்ட அமைப்பாளர் றொசான் தமீம் இன்று தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம்; மக்களுடன் கலந்துரையாடினார்.

அந்தக் கலந்துரையாடலின்போது, வடமாகாண முஸ்லிம்களின் நலன் கருதி இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் காணி தொடர்பான நடமாடும் சேவையை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர்களுக்கான காணி மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான புள்ளிவிபரங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த  புள்ளிவிபரங்கள் திரட்டும் நடவடிக்கை பூர்த்தியடைந்தவுடன் கொழும்பில் எதிர்வரும் 30ஆம் திகதி அமைச்சருடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின்போதே அமைச்சரின் யாழ்.  விஜயத்திற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .