2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் சனியன்று வேள்வி நடைபெறும்: நிர்வாகம்

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலி. வடக்கில் உள்ள கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் நாளை வேள்வி நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை நடைபெறவிருந்த வேள்வியை தடுக்கக்கோரி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியினால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரியினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வேள்வி நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக இடம்பெற்றுவரும் இந்த ஆலய வேள்வியை நிறுத்தவேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தியபோதிலும் வேள்வி நிறுத்தப்படவில்லை.

இதனையடுத்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

வேள்வி நடத்தப்படுவதற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டமையினால் வேள்வி நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுமக்களிடையே குழப்பகரமான  நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இளவாலைப் பொலிஸார் இரு பகுதியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆலயத்தில் வேள்வியை நடத்துவதற்;கான முன்னேற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு எத்தணிப்பதால்; பொது மக்களிடையே குழப்பமான நிலமை ஏற்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகையால், இந்த ஆண்டு மட்டும் வேள்வி நடத்தப்படும் என்று  வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சா.சுகிர்தன் மற்றும் ஆலய தர்மகர்த்த சபையினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையிலேயே சுகாதார வைத்திய அதிகாரி தனது முறைப்பாட்டை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .