2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளித்தெறிப்பு இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் நடவடிக்கையை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இரவு வேளைகளில் இடம்பெறக்கூடிய வீதி விபத்துக்களை தவிக்கும் வகையிலேயே ஒளித்தெறிப்பு  இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்கள் ஒட்டப்பட்டன. 

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்கள்; ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிள்களுக்கு ஒட்டுவதற்கான மஞ்சள் நிறத்திலான ஒளித்தெறிப்பு தாள்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கி உதவியுள்ளதாகவும் பொலிஸார்  கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .