2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நூற்றாண்டு விழாவையொட்டி நடைபவனி

Kogilavani   / 2013 ஜூலை 16 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

சுண்டுக்குழி மகளீர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு ஏற்பாடாக பாடசாலை பழைய மாணவிகளின் நடைபவனி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இன்று காலை 10.00 மணிக்கு சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் ஆரம்பமான இந்த நடைபவனி பழைய பூங்கா வீதியூடாக சென்று கேரியில் வீதி மற்றும் பிரதான வீதியூடாக பாடசாலையைச் சென்றடைந்துள்ளது.

சுண்டுக்குழி மகளீர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 100 நூற்று ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக நூற்றாண்டு விழாவை  நிறைவு செய்யும் முகமாக இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது கல்வி கற்றுவரும் மாணவிகள் உட்பட 200 மேற்பட்ட  பழைய மாணவிகள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .