2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வாளால் வெட்டிய பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஜூலை 18 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி இன்று தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம்  27 ஆம் திகதி புதன்கிழமை முன் விரோதம் காரணமாக வயோதிபர் ஒருவர் மீது அசிட் வீச்சுடன், வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட வேளை,  6 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஏனைய நால்வர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பாறை பகுதியில் தலைமதறைவாகியிருந்த நிலையில், நேற்று யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அம்பாறை கெக்கராவ பகுதியில் அம்பாறை பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரையும், மீட்கப்பட்ட முச்சக்கரவண்டியையும் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, மேற்படி நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .